காஞ்சி பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில்,வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-05-27 04:45 GMT

காஞ்சி ஸ்ரீ வரதராஜர் பெருமாள் திருக்கோயில் பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவத்தில் எழுந்தருளிய போது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்,வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருந்தேவி தாயாரை தரிசனம் செய்து வணங்கினர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் , வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையை ஓட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

திருப்பாத சேவை உற்சவத்தை ஒட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளை பட்டு உடுத்தி,  வைர வைடூரிய ஆபரணங்கள் அணிவித்து, மல்லிகைப்பூ , செண்பகப்பூ , கனகாம்பரப்பூ , மலர் மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க கோவிலின் ஆழ்வார் பிரகாரங்களில் உலா வந்து வேதபாராயண கோஷ்டியினர் பாடி வர வசந்த மண்டபத்தில் பெருந்தேவி தாயாரை எழுந்தருள செய்து தூப, தீப ஆராதனைகள் நடைபெற்றது.


வெள்ளை பட்டு உடுத்தி ஆண்டுக்கு ஒரு முறை திருப்பாதத்தை வெளியே காட்டி திருப்பாத தரிசனம் தரும் பெருந்தேவி தாயாரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருப்பாத சேவையை ஒட்டி பல்வேறு மாநில மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் குவிந்து திரு சேவையை கண்டு எம்பெருமான் மற்றும் தாயாரை சேவித்து சென்றனர்.

Tags:    

Similar News