மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு பணிச்சுமைகளுடன் பணிபுரிந்து வரும் வருவாய் துறை ஊழியர்களை குறை கேக்க கூட நேரம் ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு

Update: 2022-05-05 14:00 GMT

காஞ்சிபுரத்தில்  மாவட்ட ஆட்சியரைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் துறை ஊழியர்களுக்கு கடந்த நான்கைந்து மாதங்களாகவே பல்வேறு தவறுகள் புரிந்ததாக கூறி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் வழங்கப்படுகிறது.

கடந்த சில தினங்களில் மட்டுமே வாலாஜாபாத் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் காஞ்சிபுரம் மண்டல துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் ஆகியோருக்கு குற்ற குறிப்பாணை எனக்கூறப்படும் 17பி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் திரும்பப் பெறக்கோரி வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தபோது எந்த ஒரு சாதகமான பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பேசிய வருவாய்த்துறை அலுவலர்கள் , பல்வேறு துறைகளின் திட்டங்களிலும் வருவாய்த்துறை அலுவலர் இணைந்து கடந்த ஆறு மாத காலமாக பணிச்சுமையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதில் தவறு செய்யும் நபர்களை தண்டிக்காமல் வருவாய்த்துறையை ஊழியர்களை குறிவைத்து  தண்டித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அலுவலர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்பதும் , இனிவரும் காலங்களில் வருவாய்த்துறையினர் பணிச்சுமை இன்றி மன உளைச்சல் இன்றி பணிபுரியும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


Tags:    

Similar News