காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-05 06:15 GMT

காஞ்சிபுரம் கலகெ்டர் அலுவலகம் அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பெட்ரோல்,  டீசல் , கேஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுப மங்களா கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தும் கொரோனா தொற்று பரவ காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் , கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாவட்ட நகர ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News