காஞ்சிபுரத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி ஓரே நாளில் 12 பேர் உயிரழப்பு

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Update: 2021-05-07 10:15 GMT

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஓரே நாளில் 836 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 3399 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் தற்போது கூடுதலாக ஒரு கட்டிடத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், நேற்று ஒரே நாளில் 12 பேர்  தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் குறைபாடு மற்றும் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் ,  மருந்துகள் பற்றாக்குறை என பல குறைகளை மாவட்ட ஆட்சியரிடம்  மருத்துவமனை நிர்வாகிகள் முறையாக தெரிவிப்பதில்லை.

நேற்று செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் முறையிட்டபோது மருத்துவமனை நிர்வாகிகள் பதிலேதும் கூறாமல் மௌனமாக நின்றனர்.

Tags:    

Similar News