திமுக நிர்வாகியை கைது செய்ய எஸ்.பி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மனு

முகநூலில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துதல் மற்றும் நேரில் கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி டில்லிகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-09-25 11:30 GMT

மாமன்ற உறுப்பினர் முகநூலில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டதும் நேரில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் கண்ணனை  காஞ்சிபும் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் டில்லிகுமார் என்பவர் பேஸ்புக் முகநூலில் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக தகாத வார்த்தைகள் திட்டி பதிவு செய்துள்ளார்.

மாநகராட்சி ஆணையருக்கு ஆதரவாக அதிமுக, பாமக கூட்டணி கவுன்சிலர்கள் முகநூலில் பதிவு செய்த போது அதிமுக கூட்டணி கவுன்சிலர்களை திமுக பிரமுகர் டெல்லி குமார் தகாத கொச்சை வார்த்தைகளில் பேசியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் சண்முகநாதனை ,  திமுக பிரமுகர் டெல்லிகுமார் நேரில் சந்தித்து கொலை மிரட்டல் விடுத்தது காரணமாக மாநகராட்சியை சேர்ந்த அதிமுக பாமக கூட்டணி கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

தொடர்ந்து திமுக நிர்வாகி டில்லி குமார் மாநகராட்சி மேயரின் கணவருக்கு நெருங்கிய நண்பர் என்பதால் மாநகராட்சி நிர்வாகத்தில் அதிக தலையீடு செய்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு வைத்தனர்.

இந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,  முகநூல் பதிவுகளை சைபர் கிரைம் காவல்துறையினர் சரி பார்த்தபின்,  இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக மாமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்தார்.

Tags:    

Similar News