தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-04-12 09:00 GMT

ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள ஆறு சிப்காட் பகுதியில் இயங்கும் பன்னாட்டு நிறுவன தொழிலாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழில் மீண்டும் சரிவில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் உற்பத்தியாளர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

தொற்று அதிகரித்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை இழக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டு, தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் , இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட 6 தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முந்தி கொண்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள 6 சிப்காட்டில் தோராயமாக 6000 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும். தொழிலாளரையும், தொழிலையும் பாதுகாக்க முடியும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News