காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல், நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல் நடப்பதாக வந்த தகவலில் நகராட்சி ஆணையர் லெட்சுமி நேரடியாக சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-07-17 11:15 GMT

காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள ஒரு பட்டு மாளிகையில் நடந்த ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம்  கேட்டு கொண்டுள்ளது..

இந்நிலையில் நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் முறையாக பின்பற்றுகிறதா என காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர்  லட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் 12நிறுவனங்கள் குளிர்சாதன வசதி பயன்படுத்துதல் , அதிகளவு வாடிக்கையாளர்களை அனுமதித்தல், முகக்கவசம் அணியாதிருத்தல் என  ரூ8000 அபராதம் விதிக்கபட்டது.

இதேபோல் காஞ்சிபுரம் நகரில் முககவசம் அணியாது சென்ற நபர்கள், வியாபாரிகளுக்கு அபராதமாக ₹12000 என மொத்தம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருபதாயிரம் வசூலிக்கபட்டது.

தொடர்ச்சியாக விதிமீறிலில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் லட்சுமி  தெரிவித்தார்.

Tags:    

Similar News