காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Update: 2021-04-21 08:27 GMT

காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று ராஜாஜி காய்கறி சந்தை. வெளி மாவட்ட காய்கறிகள் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து கீரை வகைகள் வருவதால் அதிகாலை முதலே அதிகளவில் பொதுமக்கள், வியாபாரிகள் கூடும் நிலை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் பெருநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகிறது.

மேலும் நுழைவு வாயிலை ஒருவழி பாதையாக மாற்றம் செய்து ஊழியர்கள் சானிடைசர் அளித்து முகக் கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வியாபாரிகள் , பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் செல்ல தடுப்பு கட்டைகள் அமைத்து வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News