காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Update: 2022-01-06 07:00 GMT

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு,  இன்று முதல்,  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியருக்களுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடபட்ட து.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி 35 நபர்களும்,  இரண்டாம் தேதி நாற்பத்தி ஏழு நபர்களும் என இருந்த நிலையில்,  நேற்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 127 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 11 பேர்களும், மாநகராட்சி பத்து நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 18 நபர்களும், குன்றத்தூரில் 79 நபர்களும், உத்திரமேரூரில் ஒரு நபரும் இதர 8 பேர் என மொத்தம் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் ஒரே நாளில் இரு மடங்குக்கு மேலாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ,  மாநகராட்சி ஊழியர்கள் என பல துறையினர் முக கவசம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News