காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக 1024 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில் பதிவான வழக்குகளில் இருந்து, ரூ 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-24 04:15 GMT

கோப்பு காட்சி

தமிழகத்தில், உருமாறிய கொரோனா பரவலை தடுக்க,  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மூன்றாவது முறையாக, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் தவிர திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு செல்லவும்,  விதிகளும் கூடிய தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி பொதுமக்கள் வீதிகளில் திரிவதை கண்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர்,  மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு கண்காணிப்பை பலப்படுத்தினர். நகர் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு,  அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல்பட்டவர்கள் மீது,  பராபட்சமின்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில், மொத்தம் 1024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் வழக்குகளில் இருந்து 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தெரிவித்தார். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, உருமாறிய கொரோனா பரவலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுக்க பொதுமக்கள் அனைவரும்  ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News