கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் கலெக்டர் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக தலா ரூ.5 லட்சத்திற்கான பத்திரத்தை ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.

Update: 2021-08-02 09:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவியாக ரூ ஐந்து லட்சத்திற்கான வைப்புத் தொகை பத்திரத்தை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரண்டாவது அலையில் பல குடும்பங்களில் வருவாய் ஈட்டும் நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இதுபோன்று வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குடும்பங்களுக்கு குழந்தைகளின் நலன் காக்கும் பொருட்டு ரூ 5லட்சம் வைப்புதொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும் இதைபெற முறையாக விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டனர்.

அதன் அடிப்படையில்  இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொரோனாவால் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்து  இரு குழந்தைக்கு தலா 5லட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரத்தினை அவரது பாதுகாவலரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம். மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News