காஞ்சிபுரம்: கடைசி நேரத்தில் 3 வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போதிய இடம் கொடுக்காததால் கடைசி நேரத்தில் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

Update: 2022-02-02 13:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி , குன்றத்தூர் மற்றும் மாங்காடு  நகராட்சிகள் , உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் என மூன்று பேர் ஊராட்சிகளும் அடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டு உறுப்பினர்களும் , குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டு உறுப்பினர்களும், மாங்காடு நகராட்சியில் இருபத்தி ஏழு உறுப்பினர்களும் , வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 நபர்களும்,  உத்திரமேரூர் பேரூராட்சி 18 நபர்களும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 15 நபர்கள் என  156 நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக,  தமாக , சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சியுடன் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது.

பாஜக , பாமக , ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சியும் தனியாக வழக்கம்போல் போட்டியிடுகிறது.

திமுக , காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள், மதிமுக , மனிதநேய மக்கள் கட்சி , முஸ்லிம் லீக் என கூட்டணியுடன் களம் காண்கிறது. கடைசிவரை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காஞ்சி மாவட்டத்தில் இடம் கொடுக்க மறுத்து உள்ளனர்.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்கள்

 1 வது வார்டு. (பெண், பொது)       R.ராபியாபானு,

12. வார்டில் (பொது) M.சூர்யபாரதி , 

35. வார்டில்  (பெண், பொது) E. கிரிஜா. (வயது. 34)

ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் நாளை  மாலை 3.00 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில்  வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 156 வார்டுகளில் ஒரு வார்டு கூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு  திமுக ஒதுக்கவில்லை என்பதால் கடைசி நேரத்தில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே அறிவித்துள்ளது

Tags:    

Similar News