பச்சை கலர் போய்.. மஞ்சள் கலர் வந்துச்சு

ஆட்சி மாற்றம் கண்ட நிலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிகளவு மஞ்சள் கலர் கொண்டு அலங்கரிப்பு நடை பெறுவது தற்செயலானதா ?

Update: 2021-06-24 04:15 GMT

ஆட்சி மாற்றம் கண்ட நிலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிகளவு மஞ்சள் கலர் கொண்டு அலங்கரிப்பு நடைபெறுகிறது 

மனிதனை நிறம் கொண்டு வேறுபடுத்துவதை கண்டிக்கும் நாம், அரசு விழாக்களில் நலத்திட்ட விழாக்களில் வழங்கப்படும் பொருட்களின் அலங்கரிப்பு நிறம் மாற்றியதை அரசிற்கு சுட்டி  காட்டுவதை தவிர்த்து விட்டோமே?

முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அரசு விழாக்கள், சுவரொட்டி என எதிலும் பச்சை நிறங்களே அதிகளவில் காணப்பட்டது.

தற்போது  திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதியின் விருப்பமான மஞ்சள் நிறம் தற்போதைய விழாக்களில் காணப்படுகிறது. விளம்பர பதாகைகள், பொருட்களை விழாவில் அலங்கரிக்க  என அனைத்திலும் மஞ்சள் வண்ணம். இவற்றை கட்சியினரை மகிழ்ச்சி படுத்த அரசு அதிகாரிகள் செய்கிறார்களா ? அல்லது ஆளும் கட்சியினர் விரும்புகிறார்களா ? என தெரியவில்லை.

வேற்றுமை நிறங்களில் என்ன உள்ளது? மக்கள் நலன் சார்ந்து செயல்படுத்தும் திட்டங்களே அரசு சாதனைகளாக  பொதுமக்களால் வரவேற்கப்படுமே தவிர, வண்ண கலர்களில் அலங்கரிப்பு எவ்வித நன்மை தராது என உணர்வோம்.


Tags:    

Similar News