பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா பிரிவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு

Update: 2021-05-18 12:15 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி திடீரென ஒருநாள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் பாதுகாப்பு உடை அணிந்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள்,  உணவு மற்றும் ஆக்சிஜன் தேவைகள் வழங்கப்படுகிறதா என  கேட்டறிந்தார்.

நோயாளியிடம் பேசுகையில், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்டு வருவதாகவும்‌ விரைவில் வீடு திரும்பலாம் என ஆறுதல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மருத்துவ கண்காணிப்பாளர் , மருத்துவமனை நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News