காஞ்சிபுரம் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் .ஆய்வு

தும்பவனம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் மற்றும் எஸ் பி உணவருந்தினர்.

Update: 2023-08-22 05:00 GMT

காலை உணவு திட்ட ஆய்வின்போது மாணவர்களுடன் இணைந்து உணவு அருந்திய ஆட்சியர் கலை செல்விமோகன் மற்றும் எஸ் பி சுதாகர்.

காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுடன் உணவு அருந்தினார்.

தமிழகத்தில் மதிய உணவு திட்டம் போல், காலை உணவு திட்டத்தினை திமுக ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டு புத்துணர்ச்சியுடன் கல்வி கற்கும் வகையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து ,  முதல் கட்டமாக மாநகராட்சியில் துவக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்The collectorடுகளில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.பிள்ளையார் பாளையம் பகுதியில் காலை உணவு திட்ட கூடத்தில் காலை 6 மணி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு 37 பள்ளிகளுக்கு வேன் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தினை இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் உணவு வழங்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்தும் உணவு வகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன், எஸ் பி சுதாகர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் உணவு அருந்தி மாணவரிடம் உணவு தரம் மற்றும் சுவை குறித்து கேட்டு அறிந்தனர்.இந்த ஆய்வின்போது ஆணையர் கண்ணன் , மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள்நம்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News