காஞ்சிபுரத்தில சுதந்திர தினவிழா கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடி ஏற்றினார்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றிவைத்து, ரூ 49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-08-16 03:45 GMT

காஞ்சிபுரத்தில் கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார்.

இந்திய திரு நாட்டின் 75வது பொன்விழா சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையிலான காவல்துறை அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின விழாவையொட்டி வண்ண பலூன்கள் மற்றும் சமாதானப் புறாக்களை பறக்க வைத்தார்.

மேலும் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக 76 பயனாளிகளுக்கு ரூ 49.33 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனா காலகட்டத்தில் முன் களப்பணி அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு பூங்கொத்து , இனிப்புகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்யபிரியா மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்குபெற்றனர்.

Tags:    

Similar News