பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆர்த்தி ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

Update: 2021-08-13 08:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கடந்த பல மாதங்களாக பள்ளி வகுப்பறைகள் மூடப்பட்டு இருந்ததால் அதை முழுவதும் சுத்தம் செய்வது , கிருமிநாசினிகள் தெளிப்பது, பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல், அரசு பரவல் தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் கூறப்பட்ட அறிவுரைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,  ஆசிரியர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் சுற்றுச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News