சஸ்பெண்ட் ஆணையை ரத்து செய்ய கோரி கூட்டுறவு துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சஸ்பெண்ட் ஆணையை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-29 06:45 GMT

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்  நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் உள்ள அரிசி தரம் குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று வாலாஜாபாத் வட்டத்தில் நடைபெற்ற ஆய்வில் இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இரு சங்க செயலாளர்கள் , 9 விற்பனையாளர்கள் என 11நபர்களை  கூட்டுறவு துறை பதிவாளர்  பணியிடை நீக்கம் செய்தார்.

இதனைக் கண்டித்து அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர் சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு பணியிட நீக்கத்தை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அரிசி தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யாமல் அதை விற்பனைக்கு அனுப்பி பொது மக்களுக்கு வழங்கிய பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்தது எந்த விதத்திலும் நியாயமில்லை என தெரிவித்தனர்.

இந்த உத்தரவை இன்று மாலைக்குள் திரும்பப் பெறாவிட்டால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் மே 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News