ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் வடகலை தென்கலை இடையே மீண்டும் மோதல்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் பாடல்கள் பாடுவதில் கைகளுக்கும் ஏற்பட்டதில் இது குறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 12:45 GMT

பழையசீவரம் பார்வேட்டை நிகழ்வில்  வடகலை தென்கலை பிரிவினர் மோதி கொள்ளும் காட்சி.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழைய சீவரம் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை- தென்கலை ஐயங்கார்கள் பிரிவினர் இடையே அடிதடி மோதல். பக்தர்கள் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.திருவிழாவை காண வந்த பக்தர்கள் 

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் முன்பு பிரபந்தம் பாடல் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர்.

பார்வேட்டை உற்சவ திருவிழாவை காண வந்த பக்தர்கள், இரு தரப்பு ஐயங்கார்களிடையே நடைபெற்ற அடிதடி சண்டையைக் கண்டு முகம் சுளித்து சென்றனர்.

இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

பிரபந்த ஸ்தோத்திர பாடல்பாடுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் தொடர்ந்து இருதரப்பினரும் பொதுவெளியிலும் கோவில்களிலும் ரகளையிலும் அடிதடியிலும் ஈடுபடுவது வாடிக்கை ஆகி வருகிறது.

தற்பொழுது பழையசீவரம் அடிதடி சம்பவம் குறித்து வடகலை பிரிவினர் சாலவாக்கம் காவல்நிலையத்தில்  புகார் தெரிவித்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News