சான்றிதழ்களுக்காக வருவாய் அலுவலர்களிடம் சிக்கித்தவிக்கும் வேட்பாளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சான்றிதழ்களுக்காக வருவாய்துறை அலுவலர்களிடம் அன்பளிப்பு கொடுக்கும் நிலை உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Update: 2022-02-01 11:00 GMT

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சி ஆகியவற்றிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் வருவாய்த்துறையிடமிருந்து இருப்பிட, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை பெற்று சமர்பபிக்க வேண்டும்.

இதற்காக வேட்பாளர்கள் இ-சேவை மையம் அல்லது அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருவாய் துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுவாக இந்த சான்றிதழ்களை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.60 என 3 சான்றிதழுக்கும் ரூ.180 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதனை பெற குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகும். ஜாதி சான்றிதழ் அளிப்பதற்கு துணை வட்டாட்சியர் பரிந்துரைக்க வேண்டும்.

இந்நிலையில் தேர்தல் அவசரத்தை ஒட்டி ஏழு நாட்களைக் குறித்து மூன்று நாட்களுக்குள் அளிக்க வேண்டும் எனும் கட்டாயத்தில் இருப்பதால் வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்ய அவசரம் காட்டுவதால் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அன்பளிப்பை கட்டாயம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக குறைந்தபட்சம் 1,000 ரூபாய் அன்பளிப்பு அளித்தால் மட்டுமே இதுபோன்ற கிடைக்கிறது. மேலும் காவல் துறையில் இருந்து பெறப்படும் என்ஓசி சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 500 ரூபாய் கட்டணமும் அன்பளிப்பு தர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் வேட்பாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்களிடம் சிக்கித் தவித்து வருகின்றனர்.

பல லட்சம் ரூபாய் செலவு செய்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து குறைந்தபட்ச தொகையாவது அன்பளிப்பாக பெறுவோம் என நினைத்து  வருவாய்த்துறை செயல்படுகிறதோ என  தெரிகிறது.

Tags:    

Similar News