காஞ்சிபுரத்தில் எம்எல்ஏ வீடு முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்எல்ஏ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாரதப் பிரமதமர் மற்றும் பாஜக நிர்வாகிகளை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Update: 2023-11-04 06:15 GMT

பாரதப் பிரதமரை விவாக பேசிய காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக மாவட்ட தலைவர் கே எஸ் பாபு காவல்துறை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

பாரதப் பிரதமரை இழிவாக பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரை இல்லத்தை முற்றுகையிட என்ற பாஜகவினரை கைது செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை திறக்க பல்வேறு கிராமங்களுக்கு சென்று இருந்தார்.

அவ்வகையில் கீழ்கதிப்பூர் கிராம நியாய விலைக் கடையை  திறந்து வைத்து அங்கு வந்திருந்த மகளிர் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என முற்றுகையிட்டு கேட்டபோது, அதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் எஸ் பி அலுவலகத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் பாபு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யாமல் நின்றபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்ய கூடாது என பாஜகவினர் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது குண்டு கட்டாக காவல்துறையினரால் தூக்கி செல்லப்பட்டும் , பெண்கள் ஆண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News