அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி துவக்கிவைப்பு

School Teacher And Student News -அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2022-06-14 05:30 GMT

காஞ்சிபுரத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி.

School Teacher And Student News - தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் 2022-2023 கல்வியாண்டிற்கான வகுப்புகள் நேற்று முதல் துவங்கின. துவங்கிய முதல் நாளே முதல் கல்வி பருவ பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடைபெற்றது.

இந்நிலையில், போதிய வருமானம் இல்லை என்பதால் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல் பெற்றோர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பெற்றோர்கள் தனியார் பள்ளியில் இருந்து தங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ் பெற்று அருகில் உள்ள அரசு பள்ளிகளின் சேர்த்தனர்.

இதையடுத்து, அரசு பள்ளிகளில் தரமான கல்வி, உதவித்தொகை, இலவச உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் அனைத்தும் வழங்கி பாதுகாப்பாக மாணவர்கள் கல்வி பெறுவது பள்ளிகல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காலனி அருகில் அரசு நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை இன்று துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், மாநகராட்சி உறுப்பினர்கள் அன்பு, பிரியா சிலம்பரசன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள்‌ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News