காஞ்சிபுரம் மாநகராட்சியில் மூன்றாவது நாளாக பகுதி சபை கூட்டங்கள்

Grama Sabha Meeting -காஞ்சிபுரம் மாநகராட்சியில் இரண்டாவது நாளாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

Update: 2022-11-03 08:50 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 50-வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கேள்வி குறித்து தலைமை ஆசிரியர் புகார் அளித்தார்.

Grama Sabha Meeting -தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினமான நவம்பர் 2 ம் தேதி அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் , கலைஞர் வீடு வழங்கும் திட்டம் , ஜல் ஜீவன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தூய்மை பணியாளர் மகளிர் சுய உதவி குழுக்களை பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி , குன்றத்தூர் , மாங்காடு , வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சிகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

குறுகிய காலத்தில் இவர்களுக்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் வரும் நான்காம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் உள்ள 51 மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் நடத்த அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு நடத்தப்பட வேண்டும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக 18 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தனது ஒன்பதாவது வார்டு பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பகுதி கூட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று 2வது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 வார்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதற்கான வார்டுகள் அறிவிக்கப்பட்டு கூட்டங்கள் நடைபெற்றது.

இன்று மூன்றாவது நாளாக காஞ்சிபுரத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் உள்ள 13 வார்டுகளில் நடைபெறுகிறது. அவ்வகையில் ஐம்பதாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் , மாநகராட்சி பொறியாளர் கணேசன்,  மாமன்ற உறுப்பினர் சங்கர்  கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பலர் சாலை வசதி ,  சாக்கடை கால்வாய் வசதி , சுகாதார குடிநீர், அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என பல தேவைகள் குறித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை கீழ் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நிலை  குறித்து கோரிக்கை தலைமையாசிரியர் மனு அளித்தனர்.

இதில்  பள்ளி சுற்றுச்சுவர்  இல்லாததால் மாணவ மாணவிகள் அச்சத்துடனே இருப்பதாகவும் கால்நடைகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் சுற்றுச்சுவர் கட்டி கேட் அமைக்க வேண்டும், கூடுதல் கழிவறை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

இந்தப் பகுதி சபை கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், தி.மு.க. நிர்வாகி மலர்மன்னன், விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News