அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-09 08:15 GMT

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் குடியிருக்க வீடு கேட்டு கோரிக்கை மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம்,  கீழ்க்கதிர்ப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கட்டப்பட்டுள்ளது.

இவற்றில் அரசு புறம் போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.


அரசு மானியத்துடனும், கடனுதவியோடும் வழங்கப்படும் இவ்வீடுகளைப் பெறுவதற்காக காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள்  குடியிருக்க வீடு தருமாறு கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் வீடு கேட்டு வந்ததால் ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் கரோனா அச்சமின்றி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்துக் கொண்டு மனு கொடுக்க முற்பட்டனர்.

இதனால் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டது.மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News