108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஓய்வறை கிடைக்குமா ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஓய்வறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2021-11-07 04:15 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நிறுத்தப்பட்ட வாகனத்திலேயே ஓய்வெடுக்கும் ஊழியர்கள். 

தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள், மகப்பேறு  மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கு,  அவசர மருத்துவ ஊர்தி 108  பயன்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30மேற்பட்ட ஊர்திகளில் ஓட்டுநர் என கூறப்படும் பைலட் மற்றும் மருத்துவ உதவியாளர் என இருவர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாளகம்,  பிள்ளைச்சத்திரம், சந்தவேலூர்,  சுங்குவார்சத்திரம்,  ஸ்ரீபெரும்புதூர்,  ஆர்ப்பாக்கம் ,  உத்திரமேரூர்,  நத்தப்பேட்டை,  அய்யம்பேட்டை,  வாரணவாசி ,  ஓரகடம், படப்பை என பல இடங்களில் வாகன நிறுத்தம் மட்டுமே உள்ளது.

அதில் பணிபுரியும் ஊழியர்கள், பணியில்லா நேரங்களில்  தங்கி இருக்கவும், கழிவறைகளுடன் தங்குமிடம் சில இடங்களில் மட்டுமே உள்ளன. அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தங்கும் அறை இல்லை. இதனால் வாகனங்களிலையே ஓய்வு எடுத்து கொள்கிறார்கள். இந்நிலையினை போக்க வேண்டும், தங்களுக்கும் ஓய்வறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News