யாத்ரிகர்ளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும் : பாஜக வேட்பாளர்

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள்கோயில் பகுதியில் யாத்ரீகர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என பாஜக வேட்பாளர் சந்தோஷ் உறுதி

Update: 2022-02-17 07:30 GMT

பாஜக வேட்பாளர் சந்தோஷ்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 50 வார்டு உறுப்பினருக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 25 வார்டு பகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் சந்தோஷ் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

அவ்வகையில் கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற கோயிலான அத்தி வரதர் கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயில் பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.அவர்களுக்கு தங்கும் விடுதி கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் எனவும், வார்டு பகுதி முழுவதும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டும் , பொது மக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி பொருத்தப்படும். யாத்திரிகர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் மேற்கொள்ளப்பட்டு ராஜவீதிகளில் முற்றிலும் நெரிசல்கள் குறைக்கப்படும் எனவும் இது மட்டுமிலலாமல் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.


Tags:    

Similar News