அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் காஞ்சியில் இடியுடன் பெய்த கனமழை

அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்திரி வெயில் இன்று துவங்கிய நிலையில் காஞ்சிபுரத்தில் திடீர் என மழை பெய்தது.

Update: 2022-05-04 09:30 GMT

காஞ்சிபுரத்தில் இன்று பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என கூறப்படும் கத்திரி வெயில் இன்று துவங்கியது. கடந்த ஒரு வாரமாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு நாள் மட்டும் சிறிது நேரம் கனமழை பெய்தது.

கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைவாகி மாலை 2 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது கன மழை பெய்ய துவங்கியது .சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது.

மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திடீர் மழையால்வெப்பம் தணிந்து குளிர்ச்சி  ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் வெட்ட வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு  வருத்தத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News