சாலையில் சுற்றித் திரிந்த 9 மாடுகள் பறிமுதல்: கோசாலையில் ஒப்படைப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சுற்றித் திரிந்த 9 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-23 02:00 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இதில் பணி புரியும் பணியாளர்கள் நாள்தோறும் இரு சக்கர வாகனத்தில் பெருமளவு பயணிக்கின்றனர் இந்நிலையில் காலை மற்றும் இரவு பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் சாலைகளில் கால்நடைகள் மேய்ச்சல் இன்மை காரணமாக உரிமையாளர்கள் அதனை அவிழ்த்து விடும் நிலையில் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் இவைகள் தஞ்சம் புகுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாகவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு பெரும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மூட்டி பேருந்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலியானதும், மற்றொரு பகுதியில் மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் பெயரில், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆலோசனையில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாநகராட்சி பணியாளர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, தேரடி, சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 9  கால்நடைகளை பறிமுதல் செய்து திருவண்ணாமலை கோசலைக்கு அனுப்பி வைத்தனர்.

கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே கோசாலைக்கு அனுப்பப்படுகிறது.

கால்நடை பறிமுதல் செய்யும் போது கால்நடை உரிமையாளர்கள் இந்த ஒரு முறை மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும், இனி இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என கெஞ்சும் காட்சியும் அரங்கேறியது.

Tags:    

Similar News