காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி: 8 அரசு பள்ளிகள் 100 சதவீதம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளில் 8654 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 7546 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2023-05-19 10:00 GMT

தேர்வு எழுதுவதற்கு முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  மாணவிகள்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி கல்வித்துறை சார்பாக 10, 11 ,12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடைபெற்றது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகியது 

முடிவுகள் வெளியான நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகள், 4 மாநகராட்சி பள்ளிகள், ஏழு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், இரண்டு சமூக நலத்துறை பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் பள்ளிகள் , 59 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகள் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 89 அரசு பள்ளிகளில் 4014 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3242 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது 80.77 சதவீதமாகும்.

இதேபோல் 4640 மாணவிகள் தேர்வு எழுதியதில் 4304 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.76 சதவீதமாகும். ஒட்டுமொத்தமாக 746 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதால் 87.20 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் இந்த பொது தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

89 பள்ளிகள் செயல்பட்டு வந்ததில் 8 அரசு பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.

1. ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் சென்னகுப்பம் உயர்நிலை பள்ளி,

2. காஞ்சிபுரம் காரை அரசு உயர்நிலைப்பள்ளி.

3. வையாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி

4. புரிசை அரசு உயர்நிலைப்பள்ளி

5.காஞ்சிபுரம் காது கேளாதோர் பள்ளி

6.மாகாணியம் அரசு உயர்நிலைப்பள்ளி

7.பிச்சிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

8. காட்ரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி 

எட்டு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நான்கு பள்ளிகள் காஞ்சிபுரம் கல்வி கோட்டத்திலும் , நான்கு புள்ளிகள் ஸ்ரீபெரும்புதூர் கல்வி கோட்டத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News