பணப் பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தில் 4 புகார் - நடவடிக்கை இல்லை

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக 4 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளித்தும் அதில் சிக்கியவர்கள் சில மணி நேரத்திலேயே அவர்கள் வெளியில் சுற்றித் திரிவது தேர்தல் ஆணையத்திற்கு மேல் நம்பிக்கை குறைகிறது என மக்கள் நீதி மையம் வேட்பாளர் கோபிநாத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்..

Update: 2021-04-04 06:30 GMT

இன்னும் இரு தினங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களை தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க கோரி பணம் அளித்து வருகின்றனர்.

இது குறித்து காஞ்சி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் கோபிநாத் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை எனவும் பிடிபட்ட நபர்கள் சில மணி நேரங்களில் வெளியில் சுற்றித் திரிவதாகவும் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது போன்ற நிகழ்வுகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஜனநாயக படுகொலையாக உள்ளதாகவும் தாங்கள் இதை மாற்றியமைக்கவே வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News