காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் நகைகளை மீட்டனர்.

Update: 2021-10-31 10:45 GMT

காஞ்சிபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வழிப்பறி குற்றவாளிகள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ,  பாலுசெட்டிசத்திரம்,  வாலாஜாபாத் மற்றும் உத்தரமேரூர் காவல் நிலைய எல்லைக்குடபட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் வீடுகள் புகுந்து பணம்,  நகை திருட்டு  உள்ளிட்டவைகள் தொடர்ச்சியாக  16 இடங்களில் நடைபெற்றது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர்  உத்தரவின் பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது ‌‌

இந்நிலையில் ஏனாத்தூர் ,  மேட்டு தெருவைச் சேர்ந்த டில்லி பாபு என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரித்ததில் இவருடன் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த காளிதாஸ் மற்றும் முருகன் ஆகியோரின்  கூட்டு சேர்த்து பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருட்டு ஆகியவற்றை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதன் பேரில் மேற்கூறிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 42 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News