ரூ 2.68 லட்சம் மதிப்பிலான டாஸ்மாக் மதுபானம் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே அரசு மதுபானங்களை ஊரடங்கு காலத்தில் விற்பனை செய்ய பதுக்கிவைத்திருந்த ரூ 2.68 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மாகரல் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பதுக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Update: 2021-05-13 13:15 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி நாள்தோறும் ஆயிரக்கானக்ணோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழரசு பரவலை தடுக்கும் வகையில் இரு வார ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.

இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் மூடி உத்தரவிட்டது. பகல்12மணி பொதுமக்கள் தேவையின்றி நடமாட தடைவிதித்தது.தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் வரும்‌ 24ம் தேதி வரை மூடப்படும் என தெரிவித்த நிலையில் குடிமகன்கள் மற்றும் பலர் கள்ள சந்தையில் விற்று லாபம் பார்க்க எண்ணி மது பானங்களை பதுக்கி வைத்திருந்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் விஜியகுமார் என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பதாக மாகரல் உளவு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது ரூ 2.68 லட்சம் மதிப்பிலான சுமார் 2ஆயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்திருந்த வாலிபர் தப்பியோடிய நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News