ரூ115 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு : டிஆர்ஓ அதிரடி

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ 115 கோடி மதிப்பிலான அரசு தாங்கல் புறம்போக்கு நிலம் 15 ஏக்கரை டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மீட்டனர்.

Update: 2021-12-17 07:45 GMT

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது.

கடந்த மாதம் முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் உடனான காணொலி காட்சி கூட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை உடனடியாக மீட்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் அந்தந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டெடுக்கப்பட்ட உத்தரவிடப்பட்டு அதன்படி ஒவ்வொன்றாக கடந்த 15 தினங்களாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இதுவரை சுமார் 200 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது.

அவ்வகையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி  பகுதியில் அரசு தாங்கல்  புறம்போக்கு நிலத்தை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.இதன் சந்தை மதிப்பு ரூபாய் 115 கோடி என தெரியவருகிறது.

Tags:    

Similar News