காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 113 போலியோ சொட்டு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 113 போலியோ சொட்டு மருத்துவ முகாமினை ஆணையர், மாமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

Update: 2022-02-27 02:45 GMT

சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த மாமன்ற உறுப்பினர்கள்.

போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 22 வருடங்களாக போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்த  திட்டமிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் சுமார் 1,07,934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 2,818 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 113 இடங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது .

சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சந்துரு,  சுரேஷ் , சாந்தி சீனிவாசன்,  கமலக்கண்ணன்,  கார்த்திக், புனிதாசம்பத்  ஊர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நிலைய மருத்துவர் கிருஷ்ணராஜ் , சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ்குமார் , லட்சுமிபிரியா, இக்பால் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News