கூடுதல் பயணிகளுடன் சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம்

Update: 2021-02-25 07:15 GMT

காஞ்சிபுரத்தில் கூடுதல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோயில் , பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் அரசு நகர பேருந்து இல்லாத நிலையில் ஷேர் ஆட்டோ , பயணிகள் ஆட்டோ என பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் ஏறவும் இறங்கவும் இதுபோன்ற ஆட்டோக்கள் எளிதாக உள்ளதால் அதிகளவில் அதில் விரும்பி பயணிக்கின்றனர் .

இதை சாதகமாக்கி கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் போது விபத்துக்குள்ளாகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறையினர் மூங்கில் மண்டபம் , தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆட்டோக்களில் அரசு விதிகளை மீறி கூடுதல் பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தும் அரசு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்கவில்லை என்றால் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News