ஜெயலலிதா பிறந்தநாள்-நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Update: 2021-02-24 06:45 GMT

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் மரக்கன்றுகள் , நலதிட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இதில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் ஜெயலலிதாவின் புகழ் பாடல் ஒலிக்க அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் , அன்னதானங்கள் வழங்கி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நகர , கிராம ங்கள் தோறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அதிமுகவினர் சார்பில் ஜெயலலிதா உருவ படத்திற்கு பூக்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 51 வது வட்ட அதிமுக செயலாளர் ராகவேந்திராகுமார் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் , மகளிர் அணியினர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள், அதிமுக உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.இவ்விழாவில் சேகர் , சங்கர் , வேலன் , கோபி , மதன் , பாஸ்கர் , செல்வராஜ் , நேசன், ஷ்யாம் மகளிர் அணியை சேர்ந்த கமலா , லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News