மீனாட்சி அம்மன் கோவிலில் விரைவில் ஹாஸ்பிடல்: பக்தர்கள் அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சை தர வசதியாக மருத்துவமனை அமைகிறது.

Update: 2022-06-20 06:45 GMT
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மாரடைப்பு, மயக்கம் உட்பட உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்காக அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. இந்நிலையில் முதலுதவி உட்பட விரைந்து சிகிச்சையளிக்கும் வகையில் கோவில் வளாகத்திலேயே மருத்துவமனை அமைக்க ஹிந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரையை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Tags:    

Similar News