இருசக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.;
ஈரோடு : பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணையன் மகள் கோபிகா (25), கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், கோபிகா தந்தையுடன் ஈரோட்டிலிருந்து பவானி நோக்கி இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா்.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பவானிக்கு பிரியும் அணுகுசாலையில் திரும்பியபோது, பெருந்துறையிலிருந்து தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியாா் நிறுவனப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட கோபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கண்ணையன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.