நெருங்குது பொங்கல் பண்டிகை; ஈரோடு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை 'விறுவிறு'

erode news, erode news today-ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தைகளில், கடந்த சில தினங்களாக காய்கறி விற்பனை அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-01-09 08:06 GMT

erode news, erode news today- பொங்கல் பண்டிகை நெருங்குவதால், ஈரோட்டில், காய்கறி விற்பனை அதிகரித்து வருகிறது.

erode news, erode news today- ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் பெரியார் நகர், சம்பத் நகர் உள்பட 6 இடங்களில், உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் நேரடியாக காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் உழவர் சந்தைகளில் காய்கறிகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரு தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கோவில் திருவிழா மற்றும் விஷேசங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பெரும்பாலானோர், உழவர் சந்தைகளுக்கு வந்து காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

அதே போல் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் யாத்திரை சீசன் தொடங்கியுள்ளது. இதனால், உழவர் சந்தைகளில் வழக்கத்தை விட காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி 23.1 டன் காய்கறிகள் விற்பனையானது. இதே போல் 2-ம் தேதி 16.3 டன் காய்கறிகளும், 3-ம் தேதி 21.3 டன் காய்கறிகளும், 4-ம் தேதி 19.12 டன் காய்கறிகளும் விற்பனையானது. கடந்த 5-ம் தேதி வழக்கத்தை விட 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வந்தனர். அன்று ஒரு நாள் மட்டும் 20.5 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. 6-ம் தேதி 18.9 டன்னும்,  7-ம் தேதி 19 டன் காய்கறிகளும் விற்பனையானது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விவசாயிகள் 138.22 டன் காய்கறிகள் விற்பனை செய்தனர்.

இதே போல் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் ஏராளமானோர் வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

மேலும் அடுத்த வாரத்தில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் வரும் நாட்களில் காய்கறி விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பத் நகர் உழவர் சந்தையில் சோதனை முயற்சியாக மாலை நேர உழவர் சந்தை தொடங்கி நடந்து வருகிறது. இதில் தினமும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இங்கு உழவர் உற்பத்தியாளர்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கான தனி அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இதில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விரைவில் விற்பனை செய்யப்படும் என உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


சம்பத் நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை (கிலோவில்)

தக்காளி-ரூ.17, கத்தரி- ரூ.66, வெண்டை- ரூ.54, புடலைக்காய்-ரூ.28, பீக்கன் காய்-ரூ.55, சுரக்காய் ஒன்று ரூ.10 முதல் 12 வரை, வெள்ளை பூசணி ஒன்று ரூ.22, சிவப்பு பூசணி-ரூ18, அவரை-ரூ.50, கொத்த வரை- ரூ.35, பாகற் காய்-ரூ.44, முள்ளங்கி-ரூ.24, பச்சை மிளகாய்-ரூ.50, சின்ன வெங்காயம்-ரூ66, சேனை கிழங்கு-ரூ28, முருங்கை காய்-ரூ.98 (ஒரு காய் ரூ.15)-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News