ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

Marathon Runner Game - ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

Update: 2022-06-14 04:00 GMT

ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த ஈரோடு எஸ்பி சசிமோகன், எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆகியோர்

Marathon Runner Game - ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது .

உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது . ஆண்கள் , பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும் , பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில்,3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நந்தா கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற  தொடக்க நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பங்கேற்று  ஆண்களுக்கான போட்டியையும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா பெண்களுக்கான போட்டியையும்  கொடியசைத்து  தொடங்கி வைத்தனர்.

ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டிகளில் ஆண்கள் பிரிவுக்கான ஓட்டம்  பெருந்துறையில்  நிறைவடைந்தது.  ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News