பவானியில் கஞ்சா விற்பனை செய்த தம்பதி கைது

couple arrested for selling ganja in erode -போதைப்பொருட்களை ஒழிப்பதில் ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-08-11 06:28 GMT

couple arrested for selling ganja in erode-கஞ்சா (மாதிரி படம்)

couple arrested for selling ganja in erode-ஈரோடு மாவட்டம்,பவானி புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் 9ம் தேதி மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம் உள்ள பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது புதிய பஸ்நிலையம் அருகே ஒரு பெண்ணும் ஆணும் பையை மறைத்து வைத்தபடி நின்றனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் பவானி அருகே உள்ள சேத்துனாம்பாளையம் ராமதாஸ் நகரை சேர்ந்த பழனியம்மாள் (45) என்பதும், உடன் இருந்தவர் அவருடைய கணவர் ராமநாதன் என்பதும், இவர் பழனியம்மாளுக்கு கஞ்சா விற்பனை செய்ய உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் பையில் வைத்திருந்த சுமார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பழனியம்மாளுக்கு கஞ்சா கொடுத்த சேலம் மாவட்டம், மேட்டூர், பொட்டனேரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணையம் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News