புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த பெண்

Erode news- ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே பெண் ஒருவர் அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.;

Update: 2024-05-15 10:15 GMT

Erode news- அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- புஞ்சை புளியம்பட்டி அருகே பெண் ஒருவர் அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து புஞ்சை புளியம்பட்டி அருகே வந்த போது, அந்த பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு இருந்த அந்த பெண் திடீரென அந்த அரசு பேருந்தின் மீது கல் எடுத்து வீசினார். இதில், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தது புஞ்சை புளியம்பட்டி அடுத்து நல்லூர் பண்ணாடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரக்கால் (வயது 57) என்பதும், இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News