18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-28 04:43 GMT

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்திலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 14 வட்டார சுகாதார நிலையங்கள் மூலமாகவும், சிறப்பு முகாம் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் தோமையார்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதனை, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து காமலாபுரத்தில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாமுக்கு சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News