புதுச்சேரி பார்கவுன்சில் & மனிதநேயம் அறக்கட்டளை நடத்திய பயிற்சி வகுப்பில் சாதனை

மனிதநேயம் அறக்கட்டளை நடத்திய பயிற்சியில் பங்கேற்ற வக்கீல்கள் சாதனை

Update: 2021-09-19 08:29 GMT

மனிதநேயம் அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி 

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மனிதநேயம் அறக் கட்டளை இணைந்து நடத்திய பயிற்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், உரிமையியல் நீதிபதி நேர்முகத் தேர்வில் சாதனை படைத்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், 'மனிதநேயம்' அறக்கட்டளையுடன் இணைந்து, சிவில் நீதிபதிகளுக்கான பயிற்சி அளித்து வருகிறது. சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு பயிற்சி பெற்ற 153 பேர் வழக்கறிஞர்கள், பல்வேறு பதவிகளில் உள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடத்தப்பட்ட சிவில் நீதிபதி பதவிகளுக்கான நேர்முக தேர்வுகளுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மனிதநேயம் அறக்கட்டளை இணைந்து, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

நேர்முக தேர்வுகளின் முடிவுகளில் வெற்றி பெற்ற, 57 பேர்களில், 20 பெண்கள் உட்பட 36 பேர், மனி தநேயம் அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்கள். தரவரிசைப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை பிடித்த வழக்கறிஞர்கள், மனிதநேயம் அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மனிதநேயம் அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News