கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-26 08:50 GMT

கைது செய்யப்பட்ட பாண்டியராஜன்.

கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன் கடையில் கதவை உடைத்து விலை உயர்ந்த செல்போன், பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் ராஜா என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சரவணன் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பூட்டி இருந்த கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள் சிலர் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடையின் உரிமையாளர் சரவணனுக்கு தகவல் அளித்தனர்.தகவல் அறிந்து வந்த சரவணன் ஷட்டர் உடைக்கப்பட்டு செல்போன் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இதுக்குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் ( வயது 33) என தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு சம்பந்தமான குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News