தமிழகத்திற்கு வரும் அதிக தொழில் முதலீடுகள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது -முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

Update: 2022-06-01 05:13 GMT

தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பார்வையிட்டார்.

டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கான பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

முதலமைச்சருடன், மாநில அமைச்சர்கள் கே என் நேரு, எம் ஆர் கே பன்னீர்செல்வம், எ வ வேலு, சக்ரபாணி, மெய்யநாதன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பாசனக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், நேற்று மாலை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால், தொழில் முதலீடுகள் தேடி வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு இதுவே சாட்சி.

கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கூடலூர் ஆகிய மாவட்டங்களில் நான்காயிரத்து 418 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது, பாசனப்பகுதிகளில் ஆயிரத்து 580 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

Similar News