அரியலூரில் நீட்தேர்வுக்கு எதிராக பேரணியாக புறப்பட்ட இளைஞர்கள் கைது

நீட் தேர்வினை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள நடை பயணம் புறப்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Update: 2022-04-01 14:44 GMT

நீட் தேர்விற்கு எதிராக பரப்புரை செய்ய புறப்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தில், நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நூலகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி 8 நாட்கள் நடை பயணமாக குழுமூர் கிராமத்தில் இருந்து தொடங்கி சென்னை வரை நீட் தேர்வினை எதிர்த்து  பரப்புரை நடைபயணம் மேற்கொள்ள இன்று தயாராகினர்.

பேரணி புறப்பட தயாரான இளைஞர்களை செந்துறை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News