வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

Northeast Monsoon -அரியலூர் மாவட்ட பேரிடர்மேலாண்மை சார்பில் வடகிழக்குபருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைபணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-08 09:39 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

Northeast Monsoon -அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், எண்ணெய் நிறுவனங்கள், அலைபேசி சேவை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், சிமெண்ட் நிறுவனங்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அனைத்து அரசு, தனியார் பள்ளி கட்டிடங்களும் கட்டிட விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்திடவும் ஆசிரியர்கள், சக கல்வியாளர்களுக்கான சிறப்பு பேரிடர் குறித்து பயிற்சியினை ஏற்படுத்தி தந்திடவும், பள்ளி, கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்து, விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கும்பொருட்டு, பழுதான மற்றும் பலவீனமான கட்டிடங்கள், சுவர்கள் கண்டறிந்து, இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திடவும்; இடிக்கப்படும்வரை அக்கட்டிடங்களை கண்டிப்பாக பயன்படுத்தாமல் இருக்கவும் பள்ளிக்கட்டிடங்களில் உள்ள மின் இணைப்புகள், நிறுவிகளை (Installations) சரிபார்த்து, பழுது நீக்கிடவும் திறந்தவெளி வாய்க்கால்கள், குழிகளை சுத்தம் செய்திடவும் மற்றும் மூடிடவும், கட்டிடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காத வண்ணம் அடைப்புகளை சுத்தம் செய்திடவும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றிடவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு (ICU) மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (CCU)–களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரத்தினை வழங்கிடும்பொருட்டு, POWER Backup வசதிகளை வைத்து இயங்குவதை உறுதி செய்திடவும் போதுமான அளவில் அவசரகால மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள், உயிர்காக்கும் உபகரணங்கள் ஆகியனவற்றை இயங்கும் நிலையில் வைத்திருக்கவும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு ஒரு மாதத்திற்கு தேவையான டீசல் எரிபொருளை முன்கூட்டியே இருப்பு வைத்திருக்கவும் மருத்துவமனைகளில் போதுமான திறன் உடைய ஜெனரேட்டர்களை நீரில் மூழ்காதவாறு உயர்வான இடத்தில் குறிப்பாக, முதல் தளத்தில் POWER Backup வசதியுடன் வைத்திட நடவடிக்கை எடுத்திடவும், தீ தடுப்பு திட்டங்களை கடைபிடித்திடவும், மருத்துவமனை பாதுகாப்பு திட்டம் தயார் செய்து வைத்திடவும் பேரிடர் மேலாண்மை திட்டத்தினை மேம்படுத்தி அளித்திடவும் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் தடையில்லாமல் அலைபேசிகள் இயங்கிட அலைபேசி கோபுரங்களை பராமரித்திடவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தடையில்லா சேவை கிடைப்பதற்கும் மீள இணைப்பு வழங்குவதற்கும் போதிய அளவில் பணியாளர்கள் வைத்திருக்கவும் அலைபேசி கோபுரங்களில் POWER Backup வசதியுடன் ஜெனரேட்டர் வைத்திடவும் ஒரு மாதத்திற்கு தேவையான டீசல் எரிபொருளை முன்கூட்டியே இருப்பு வைத்திடவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் போதிய அளவிற்கு டீசல், பெட்ரோல், எரிவாயு உருளைகளை இருப்பு வைத்திடவும் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு பேரிடர் குறித்து மண்டலக் குழுக்களுடன் இணைந்;து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் பேரிடரால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவக்குழுவுடன் இணைந்து முதலுதவி சிகிச்சை அளித்திடவும் பேரிடரால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று, மண்டல குழுக்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளவும் பேரிடரால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான பொருளுதவி மற்றும் அத்தியாவசிய வசதிகளை மண்டலக்குழுக்களின் ஆலோசனைகளின்பேரில் செய்து தந்திடவும் தன்னார்வலர் அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

சிமெண்ட ஆலைகளில் பழுதான மற்றும் பலவீனமான நிலையில் உள்ள தொழிற்சாலைக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் இருப்பின், அக்கட்டிடங்களை சரிசெய்யும்வரை கண்டிப்பாக பயன்படுத்தாமல் இருக்கவும் . தொழிற்சாலைகள் இல்லாமல் பிற இடங்களில் பேரிடர் ஏற்படும் நிகழ்வுகளில் தேவையான மீட்பு உபகரணங்களான எரிபொருளுடன் JCB, மரம் வெட்டும் கருவி, ஐனரேட்டர், etc., உடனடியாக வழங்கி மீட்புப் பணிகள் மேற்கொள்ள உதவிடவும் தொழிற்சாலைகள் இல்லாமல் பிற இடங்களில் பேரிடர் ஏற்படும் நிகழ்வுகளின்போது பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான பொருளுதவி மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்து தந்திடவும் பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்குண்டான மீட்பு உபகரணங்களின் (Inventories) பட்டியலை, மாதந்தோறும் பேரிடர் மேலாண்மை பிரிவில் அளித்திடவும் தெரிவிக்கப்பட்டது.

நிவாரண முகாம்களாக செயல்பட உள்ள பள்ளிக்கட்டிடங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்திடவும் பொது விநியோக அங்காடிகளில் பொது விநியோக பொருட்கள் அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக போதுமான அளவு இருப்பு வைத்திடவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் இருப்பின் உடன் சம்மந்தப்பட்ட மின்துறை அலுவலர்கள், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தினை தொடர்பு கொள்ளவும் மழை காலத்தில் குவாரிகளிலிருந்து வெளியே வரக்கூடிய சுண்ணாம்புக்கல் லாரியின் சக்கரங்களை சகதிகள் இன்றி முழுமையாக சுத்தம் செய்து வெளியே வரவேண்டும் என சிமெண்ட் ஆலைகளின் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News