அரியலூர் மாவட்டத்தில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டத்தில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.61லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Update: 2022-01-14 13:59 GMT

அரியலூர் மாவட்டத்தில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவைர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11,47,500/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,37,088/- மதிப்பில் பிரெய்லி எழுத்து வடிவில் தொடுவுணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 04 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000/- நியுதவி மற்றும் 8 கிராம் தங்கமும், 25 செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு ரூ.76,450/- மதிப்பில் காதொலிக் கருவிகளும் என மொத்தம் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,61,038/- மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் ஆதரவு உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News