அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல்

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத ரூ. 50,800 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-30 04:56 GMT

அரியலூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,  முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 5 மணி அளவில் தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை இன்று விடியற்காலை வரை நீடித்தது.

இதில், கணக்கில் வராத 50 ஆயிரத்து 800 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களை இரவு 12 மணிக்கு பிறகும், மற்றவர்கள் நான்கு மணிக்கு பிறகுமே வீட்டிற்கு செல்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News